
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்
நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக
5 comments:
என்னப்பு லவ்ஸ்சா?
உங்கள் வருகைக்கு நன்றி இலங்கேஸ்வரன்... ம்ம்ம்... இல்லையென்றால் நம்பவா போறீங்க..???
அருமை. வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Madurai Saravanan..
நம்பிக்கை தான் வாழ்க்கை கனவோடு காத்திருங்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Post a Comment