Friday 27 August 2010

அழ‌கிய‌ முர‌ண்பாடு...


இமைக‌ள் இர‌ண்டின்

இர‌க்க‌ம‌ற்ற‌ பிரித‌லில்

முட்டாள் விழிக‌ள்

முர‌ணாய் ர‌சித்த‌ன‌


க‌ண‌நேர‌ம் கூட‌

க‌த‌றி அழ‌வில்லை

க‌ன‌த்துப் போன‌

க‌ண்ணிமை இர‌ண்டும்


மெதுவாய் வீசிய‌

மெல்லிய‌ தென்ற‌லில்

வ‌ளியில் மித‌ந்து

விழியில் விழுந்த‌ன‌

தூசித் துக‌ள்க‌ள்


விழுந்து உருண்ட‌

தூசித் துக‌ள்க‌ளில்

க‌ல‌ங்கித் துடித்த‌ன‌‌

க‌ரிய‌ விழிக‌ள்


க‌ல‌ங்கித் துடித்த‌

க‌ரிய‌ விழிக‌ளை

இத‌மாய் வ‌ருடி

இழுத்து அணைத்த‌ன‌

இமைக‌ளிர‌ண்டும்


இமைக‌ள் இர‌ண்டின்

இத‌மான த‌ழுவ‌லில்

க‌டை விழியோர‌ம்

க‌ண்ணீர் துளிக‌ள்


புரித‌ல‌ற்ற‌ நேச‌த்தின்

எரிந்துபோன‌ எல்லையில்

உடைந்துபோன‌ உற‌வை

உடைத்து விட்ட‌தாய்

இத‌ழ் க‌டையோர‌ம்

இக‌ழ்ச்சிப் புன்ன‌கையில்

அவ‌ளின் உற‌வுக‌ள்..



No comments:

Post a Comment