Thursday 4 February 2010

என்னுயிர் உறைந்திருக்கும்…


புதுமலரில் பட்டு

சிதறி விழும் பனித்துளிபோல்

என்மனதில் விழுந்து

எங்கேயோ தொலைந்துபோனாள்


மயக்கும் பார்வையில்

கிறங்கியபோது

உருக்கிய ஈயத்தை

ஊற்றிச் சென்றாள்


அன்புப் பேச்சில்

அகமகிழ்ந்தபோது

அதையே கூராக்கி

அடிநெஞ்சில் செருகினாள்


அவளே உலகமென்று

சுற்றினேன் முழுமதியாய்

அனுதினமும் என்னை

அனலிலிட்டு பொசுக்கினாள்


வற்றாத பாசத்தை

வரமாகக் கேட்டேன்

வலிகளை மொத்தமாய்

வாங்கிவந்து பரிசளித்தாள்


ஆண்டுகள் சென்றாலும்

வேண்டுமவள் தரிசனம்

ஆயுளின் அந்திவரை

அழியாது என்நேசம்


எரிந்த சாம்பலில்

உயிர்த்தெழும் சக்கரவாகமாய்

என்நேசம் என்றும்

உயிர்ப்புடன் இருக்கும்


ஊழிப் பிரளயத்தில்

உலகமே அழிந்தாலும்

என்னுயிர் அவளின்

நினைவில் உறைந்திருக்கும்

1 comment:

சிவாஜி சங்கர் said...

//ஊழிப் பிரளயத்தில்
உலகமே அழிந்தாலும்
என்னுயிர் அவளின்
நினைவுக்குள் உறைந்திருக்கும்//
வலிமையான வலி சொல்லும் வரி..Keep Rockzzz

Post a Comment