Sunday 19 September 2010

நல்லதோர் வீணை செய்து...


வாரஇறுதி விடுமுறைகூட

வருடங்களின் பின்புதான்

ஓய்வின்றிய உழைப்பில்..


தொலைந்து மறையும்

தொலைதூர உறவுகள்

தொலைபேசி அழைப்பில்..


முழுநாளும் வேலைக்குள்

தடம்மாறும் நண்பர்கள்

முகம்பார்க்க முடியாமல்..


தொலைவில் இருந்து

தொலைபேசிக்குள்ளே

குடும்பம் நடத்தி..


தூங்கியெழ மட்டும்

வீடுவந்து செல்லும்

குடும்பத்து உறவுகள்..


பம்பரமாய் உழைக்கும்

பரதேசி வாழ்க்கையின்

பாழாய்போன கொள்கை..


பசிக்கும்போது உணவு

களைத்தபோது தூக்கம்

கிடைத்தாலே போதும்..


வருஷங்களுடன் சேர்த்து

வாழ்க்கையை தொலைக்கும்

வலிமையான வட்டத்துள்..


முடிவற்ற பாதையில்

தெளிவற்ற பயணமாய்

புரிந்தும் புரியாமலும்

புலம்பெயர் வாழ்வு..



2 comments:

நிலாமதி said...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல் வருமா ..........என கேட்க தோன்றுகிறது.

தமிழ்பிரியன் said...

உங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அக்கா..

Post a Comment